அழைப்பு விடுக்கப்பட்ட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க!

625.500.560.350.160.300.053.800.900.160.90 43
625.500.560.350.160.300.053.800.900.160.90 43

எதிர்வரும் நாட்களில் நடைபெறும் கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்திற்கு முன்னாள் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனில் ஜாசிங்கவிற்கு பதவி உயர்வாக மாத்திரம் சுகாதார அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

சுகாதார அமைச்சில் பணிப்பாளர் நாயகம் பதவி வெற்றிடமாகியிருந்த போதே வைத்தியர் ஜயரூவான் பண்டார சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றினார்.

ஆனால் தற்போது சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வைத்தியர் ஜயரூவான் பண்டார சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து தனது சுய விருப்பின் பேரில் விலகியுள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.