இத்தாலியின் 2021 வரவுசெலவுத் திட்டம்: கோவிட்19 நிதி தாக்கத்தை குறைபதில் கவனம்!

Italy budget
Italy budget

ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் ஒன்றான இத்தாலியில் நாட்டின் நிதி தாக்கத்தை குறைக்கும் முகமாக 2021 வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏறக்குறைய 50 ஆயிரம் இறப்புகள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நிதி தாக்கத்தை நிவர்த்தி செய்யும் முயற்சியில், அடுத்த ஆண்டுக்கான பொருளாதார ஊக்கத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை வாங்க 400 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, விரைவான சோதனைக கருவிகளை வாங்க 70 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு வீழ்ச்சி கண்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு உதவும் நடவடிக்கைகள் மற்றும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பினை இழந்தவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் பொது செலவினங்களுக்கான புதிய அணுகுமுறைக்கு ஏற்ப, வரவு செலவுத் திட்டத்தில் அதிகமான பெண்களை மீண்டும் வேலைக்கு இணைப்பதையும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.