யாசர்களை போல் ஆள்மாறாட்டம் செய்யும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை – அஜித் ரோஹன

06154876 b33ba3eb ajith rohana 850x460 acf cropped
06154876 b33ba3eb ajith rohana 850x460 acf cropped

யாசர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் நபர்களை கைதுசெய்ய கொழும்பு நகரத்திலும், அதன் புறநகர் பகுதிகளிலும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் காவல்துறை மா அதிபரும் காவல்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நபர்களை அடையாளம் கண்டு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம் சமிக்ஞைகள் மற்றும் சந்திகளில் வாகன ஓட்டுநர்கள், பயணிகள் யாசகம் பெறுபவர்களுக்கு எதையும் வழங்கக்கூடாது எனவும், விற்பனையாளர்களிடமிருந்து எதையும் வாங்கக்கூடாது எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் அவ்வாறு ஈடுபடுவது அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்குள் தொடுக்கப்படுவதுடன், கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.