கிராம ரீதியாக டெங்கு மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்

IMG 20201119 WA0025
IMG 20201119 WA0025

வவுனியா காத்தார்சின்னக்குளம் கிராமிய சுகநல மேம்பாட்டுக்குழுவின் ஒழுங்கமைப்பின் கீழ் கிராம ரீதியான  கொரோனா விழிப்புனர்வு மற்றும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விழிப்புனர்வூட்டும் செயற்பாடு நடைபெற்று வருகின்றது.

IMG 20201119 WA0022
IMG 20201119 WA0022


இந் நிழ்ச்சி திட்டத்தின் முதற்கட்டமாக வவுனியா ஸ்ரீராமபுரம் கிராமம் தெரிவு செய்யப்பட்டு 18 ஆம் திகதி தொடக்கம் விழிப்புனர்வு செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

IMG 20201119 WA0027
IMG 20201119 WA0027

 
அதற்கமைய இன்றையதினம் (19)  ஸ்ரீராமபுரம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட  இல்லத்தரிசிப்பு நிகழ்வில் கிராம அலுவலர், பொதுச்சுகாதார பரிசோதகர், டெங்கு தடுப்பு கள உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுனர்கள், ஸ்ரீராமபுரம் கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் என பலரும் இணைந்து குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

IMG 20201119 WA0020
IMG 20201119 WA0020


இச் செயற்பாட்டில்  குடம்பிகள் காணப்படும்  இடங்கள், நுளம்பு பெருகும் இடங்கள்  அடையாளப்படுத்தப்பட்டு, உரிய மாதிரிகள் பெறப்பட்டதுடன், காணி உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டு நுளம்புத்தடைச்சட்டத்தின் கீழ் அறிவித்தல் சிட்டை வழங்கப்பட்டதுடன் பற்றையாக உள்ள அனைத்து இடங்களும் துப்பரவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கொரோனா விழிப்புணர்வு அறிவித்தலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

IMG 20201119 WA0023
IMG 20201119 WA0023