கொரோனா அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பாடசாலைகளை திறப்பது ஒத்திவைப்பு!

c65
c65

வடமேற்கு மாகாணத்திற்குள் கொரோனா அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகள் நவம்பர் 23 ஆம் திகதி திறக்கப்படாது என்று ஆளுநர் ராஜா கொலுரே தெரிவித்துள்ளார்.

மேற்கு மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் அடுத்த திங்கட்கிழமை (23) முதல் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என்று அரசாங்கம் அறிவித்தது.

எவ்வாறாயினும், குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் கொரோனா அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்க மேலும் ஒருவாரம் ஆகும் என ராஜா கொலுரே தெரிவித்துள்ளார்.

இதன்படி, குருணாகல் நகரசபை எல்லைப்பகுதி, குருணாகல் எம்ஓஎச் பகுதி, மல்லவபிட்டிய பகுதி, குளியாபிட்டிய நகர சபை எல்லைகள், பன்னல நகர சபை எல்லைகள், ஈரியகொல, ரம்பொடகல, நாரம்மால, மஹாவ, கஜனேகம, அம்பகஸ்வேவ, பலால்ல, யபாஹுவா ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்தின் பாடசாலைகளை 1,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் மீண்டும் திறக்க மாவட்ட செயலாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.