வரவு செலவுத் திட்டத்தின் பிரதிபலன்கள் ஒரு வருடத்தின் பின்னரே தெரியவரும்-ஊடகத்துறை அமைச்சர்!

image 1516117879 928a7f338d
image 1516117879 928a7f338d

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பிரதிபலன்கள் ஒரு வருடத்தின் பின்னரே தெரியவரும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்தி நாட்டை முன்னுக்குக் கொண்டுசெல்லலாம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், எதிர்க் கட்சியினர் வரவு செலவுத் திட்ட யோசனைகளை இலக்கங்களாலும் கணக்கு அறிக்கைகளாலும் விமர்சித்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இவர்களின் வாதம் ஒருவருடத்துக்கு பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில், ஒரு வருடத்துக்குப் பின்னரே இந்த வரவு செலவுத் திட்ட யோசனைகள் வெற்றியடைந்துள்ளதா அல்லது தோல்வியுற்றுள்ளதா என தெரிந்துகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.