மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தல்!

weatheralert pagetamil 4
weatheralert pagetamil 4

நாட்டிற்கு தென்கிழக்கு திசையில் வங்காள வரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தழம்பல் நிலையானது தாழமுக்க பிரதேசமாக மாற்றமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிக மழையுடனான வானிலைக் காணப்படுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்றின் வேகமானது 40 முதல் 50 கிலோமீற்ர் வேகத்தில் காணப்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்துவரும் மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களின் ஆழமான மற்றும் ஆழமற்ற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

அத்துடன், காற்றின் வேகமானது 50 முதல் 60 கிலோமிற்றர் வேகத்தில் அதிகரித்து காணப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.