பாடசாலை கல்விச் செயற்பாடுகள் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்த பட வேண்டும் – வைத்தியர் சி. ஜமுனாநந்தா வேண்டுகோள்!

jamunaaa
jamunaaa

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தின் காரணமாக இதுவரை காலமும் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்து மீண்டும் நாளை (23) முதல் தமது மூன்றாம் தவணைகல்விக்காக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மாணவர்கள் எவ்வாறு பாடசாலையில் நடந்து கொள்ள வேண்டும் அல்லது நடத்த பட வேண்டும் என்பது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் வைத்தியர் சி. ஜமுனாநந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையின் முழுவடிவம் வருமாறு

சமூக இடைவெளியினைப் பேணி வாழ்தல் என்பதில் மாணவர்களின் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளும் புதிய ஒழுங்கில் அமைக்க ப்படல் வேண்டும்.

கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்துகள் இன்னும் சில மாதங்களில் பாவனைக்கு வந்துவிடும். ஆனால் அதுவரை கொரோனாத் தொற்றிலிருந்து விலகி இருத்தல் எமக்கு உரிய பாரிய சவால் ஆகும்.

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல், கைகளை கழுவுதல், தூய்மிகளின் பாவனை என்பன எமக்கு பரீட்சயமான நோய்த் தொற்றுக் காப்பு நடவடிக்கைகள் அடுத்து தேவையற்ற விதத்தில் ஒன்று கூடுவதைத் தவிர்த்தல் ஆகும்.

காய்ச்சல், சுவாசத் தொற்று உடையவர்கள் பொது இடங்களைத் தவிர்த்தல் நோய் பரவலைத் தவிர்க்கும். நோய் அறிகுறி உடையவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் இரண்டு கிழமைகள் தனிமைப்படுத்தல் வேண்டும்.

எனவே இவற்றினைக் கருத்தில் கொண்டு முற்காப்பு நடவடிக்கைகளுடன் பாடசாலைகள் இயங்க வேண்டும். பெருந்தொகையான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் மாணவர்கள் ஒரே வாயிலால் ஒன்று கூடுவதைத் தவிர்க்கவும்.,

குறித்த மாணவர் குழுமத்துடன் மற்றைய மாணவர் குழுமம் ஒன்று கூடுவதைத் தவிர்க்கவும். பாடசாலை வகுப்புக்களிற்கேற்ப புதிய , புதிய வாயில்களை தற்போது அமைக்க வேண்டும்.

இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் ஓரிடத்தில் திரள்வதைத் தவிர்க்க முடியும். இதனால் தற் செயலாக ஒருவருக்கு தனிமைப்படுத்தும் நிலை ஏற்பட்டாலும் பாடசாலையை முழுமையாக மூடாது கல்விச் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

யாழ் போதனா வைத்தியசாலை எவ்வாறு நோயாளர்களை நெருக்கமாக ஒரே வழியாக வாராது பல்வேறு வாயில்களையும் கட்டடங்களையும் பயன்படுத்துகின்றதோ அவ்வாறே பாடசாலைகளும் தங்கள் வளங்களையும் புதிய வாயில்களையும் பயன்படுத்தலாம்.இது ஒரு புதிய சமூக ஒழுங்கில் வாழக் கற்றுக் கொள்ளும் வழியாகும். மருத்துவர் . சி.யமுனாநந்தாஎனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .