வவுனியாவில் 28 வருட பாடசாலை வரலாற்றில் 185 பள்ளிகளைப் பெற்ற மாணவன் மோர்சிபவன் கவின்!

IMG 54137372a804e2055b222d3ce3681891 V 1
IMG 54137372a804e2055b222d3ce3681891 V 1

வவுனியா மகாறம்பைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையின் 28 வருடகால வரலாற்றில் 185 புள்ளிகளைப் பெற்று மோர்சிபவன் கவின் பாடசாலைக்கும் பாடசாலைச்சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கே.வைத்தீஸ்வரன் தெரிவித்துள்ளார் .

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும்போது ,

இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் மகாறம்பைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மோர்சிபவன் கவின் 185 , பிரதீபன் டினுசியா 149 , ரவிசங்கர் திருசிகா 149 , தவராசா திவான் 139 , புண்ணியமூர்த்தி குயின்சிகா 130 , கிருஷ்ணகுமார் டசைன் 116 , சிவானந்தம் கீர்த்திகள் 109 பள்ளிகளையும் பெற்றுக்கொண்டனர் .

இதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 185 புள்ளிகளைப் பெற்று மோர்சி பவன் கவின் பாடசாலைக்கும் பாடசாலைச்சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் .

ஏனைய அனைத்து மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று எமது பாடசாலைக்கு 100 சதவீத சித்தியைப் பெற்றுத்தந்துள்ளார்கள் .

இக்கிராமப்புற பாடசாலையில் 28 வருட பாடசாலை வரலாற்றில் இந்தவருடம் 185 எனும் அதிககூடிய புள்ளிகள் பெறப்பட்டமை விஷேடமாகும் .

கடந்த 2018 ஆம் ஆண்டில் இரு மாணவர்களும் 2019 ஆம் ஆண்டு ஒரு மாணவியும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார் .