உண்மையை சொல்லும் ஊடகங்களை அரசு தாக்க முயற்சிக்கிறது – மனோ கணேசன்

mano
mano

உண்மையை சொல்லும் ஊடகங்களை அரசாங்கம் தாக்க முயற்சிப்பதோடு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஆரம்பமாகிறது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகு பற்றி அவர் தெரிவித்ததாவது,

இந்த நாட்டிலே இரண்டுவகையான ஊடகங்கள் உள்ளன. ஒன்று கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்கள் மற்றது உண்மைக்காக, ஜனநாயகத்திற்காக போராடுகின்ற ஊடகங்கள். இவ்வாறான ஊடகங்களைத்தான் அரசாங்கம் தாக்கமுயற்சிக்கிறது. இதே அரசாங்கம் கடந்த முறை ஆட்சியில் கூட இந்த ஊடகங்களை கண்டித்து ,எரித்து, ஒழித்தது. இருந்தும் அந்த ஊடங்கங்கள் நெருப்பிலே இருந்து எழுந்துவரும் பீனிக்ஸ் பறவைகள் போல மீண்டும் எழுந்து வந்தன.

ஜனநாயகத்தைப்பாதுகாப்பதற்கு, மக்களாட்சியைப் பாதுகாப்பதற்கு நான்கு தூண்கள் இருக்கின்றன. ஒன்று நிறைவேற்று அதிகாரம், இரண்டு பாராளுமன்றம், அடுத்தது நீதுத்துறை ,நான்காவது பிரதித்துவம் தான் ஊடகம். கடந்த காலங்களில் 50 க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்,பெரும்பான்மையானோர் தமிழ் ஊடகவியலார்களாக இருந்திருக்கிறார்கள் அது உன்மை. ஆனால் கொள்ளப்பட்ட ஊடகவியலாளர்கள் மக்களுக்காக குரல் கொடுத்தவை.

மேலும் இந்த அரசாங்கம் கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்களுக்கு நிறைய சலுகைகளை கொடுக்கிறது ஆனால் உண்மையான செய்திகளை சொல்கின்ற ஊடகங்களை அழிக்கிறது. ஆகவே இவற்றுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என தெரிவித்துள்ளார்.