ஒதியமலையில் இலங்கை இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட 32 பேரின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

othiyamalai 15

ஒதியமலையில் இலங்கை இராணுவத்தினால்  1984ம் ஆண்டு வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்ட  32 பேரின்  36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

othiyamalai 7

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் ஒன்றான  ஒதியமலை கிராமத்தில் இராணுவத்தினாலும் சிங்கள  காடையர்களாலும் சுட்டும் வெட்டியும்  கொல்லப்பட்ட 32 ஆண்களின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
இந்த படுகொலையினை நேரில் பார்த்த கந்தசாமி அன்று நடந்த தனது அனுபவத்தினை பகிர்ந்து போது .அன்று அதிகாலை வேளை எங்கள் கிராமத்திற்குள் நுளைந்த காடையர்கள் எங்கள் வீடுகளில் உள்ள ஆண்களை அழைத்து சனசமூக நிலையத்தில் ஒன்றுசேருமாறு அழைத்தார்கள் அங்கு சென்ற போதுதான் எங்களுக்கு தெரிந்தது இது படுகொலை செய்யதிட்டம் தீட்டியுள்ளார்கள் இந்த நடவடிக்கை அன்று இருந்த அரசின் திட்டமிட்ட ஒரு செயல் அதற்கு முன்னாள் முல்லைத்தீவு மாவட்டத்ல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் ஓடாமாலும் மக்கள் வெளியேறாத வண்ணமும் செயற்படுத்தப்பட்டுள்ளார்கள் இந்த படுகொலைக்காக வயதான தாடிகளை கொண்ட ஆயதம் தரித்த காடையர்கள் எங்கள் ஊர் எல்லை மலைக்கல்லடியில் முதன்நாள் இரவே வந்து தங்கியுள்ளார்கள் இது ஒரு திட்டமிடப்பட்ட செயல்.

othiyamalai 11


அன்று அதிகாலை 32 ஆண்களையும் ஒன்றாக சனசமூக நிலையத்தில் அழைத்து அனைவரின் தலையிலும் துப்பாக்கியால் சுட்டார்கள் அனைத்து தமிழ்மக்களின் தலைகளிலுமே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன இரத்த வெள்ளத்தில் வாசிகசாலை காணப்பட்டது நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் உள்ள வவுனியா மாவட்ட எல்லைக்குள் போகவேண்டிய தேவை ஆனால் முல்லைத்தீவு செல்வது என்றால் 19 கிலோமீற்றர் தூரம் அருகில் 6 கிலோமீற்றர் தூரத்தில் நெடுங்கேணி காணப்படுகின்றது வெள்ளைக்கொடியுடன் நான் சென்றேன் என்ன நடந்தாலும் பறவாய் இல்லை வெள்ளைக்கொடியினை காட்டிக்கொண்டு செல்வோம்.

othiyamalai 9


 இறந்தவர்களை அனைவரையும் ஒன்றாக சேர்த்து மரண விசாரணை அதிகாரியை அழைத்து விசாரணையின் பின்னர் உடலங்கள் அனைத்தையும் அருகில் உள்ள மரம் ஒன்றின் கீழ் அனைவரையும் அடுக்கி ஒரே தடவையில் இறுதி கிரியைசெய்து எரித்தோம் இவ்வாறு எங்கள் மண்ணில் இன்றும் அந்த சொந்தங்களை இழந்த தவிப்பில் வாழ்ந்து வருகின்றோம் இன்று(02.12.20) 36 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இது ஒரு அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையில் ஒன்றாக காணப்படுகின்றது என்றார் .

othiyamalai 1


இதன்போது அ.ஜெகநாதன், க.கனகையா,ச.சண்முகசுந்தரம்,த.காசிப்பிள்ளை, க.பொன்னம்பலம், கோ.கணபதிப்பிள்ளை, த.சுப்பிரமணியம்.த.சிவஞானம்.த.கணபதிப்பிள்ளை கி.பரமலிங்கம்.த.சதாதசிவம் வீ.தில்லைநடராசா ,பொ.தேவராசாத.வேலுப்பிள்ளை, கி.இராசலிங்கம்,க.சிவபாதாம்நா.சின்னையா, சி.இராசேந்திரம, வே.சிதம்பரப்பிள்ளை, வே.சந்திரன், ச.மோகநாதன்க.சிவசிதம்பரம்,ச.சபாரத்தினம்,ந.நவரத்தினம்,க.சின்னையா,நா.கேதீஸ்வரன்,சி.இராசையா,ச.ரவீந்திரன்,க.தர்மலிங்கம்,க.செல்வராஜா,சு.கெங்காதரன்,ச.நடராசா ஆகிய 32 ஆண்களே இவ்வாறு கொல்லப்பட்டனர்
இவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இவர்கள் படுகொலை செய்யப்பட்ட சனசமூக நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

othiyamalai 8


அங்கு உறவுகளை நினைந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் கோவிலில் ஆத்மா சாந்தி பூஜைகள் இடம்பெற்றது.நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகளுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் இ.சத்தியசீலன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டன.

othiyamalai 3
othiyamalai 3