தொழிநுட்ப அமைச்சுக்கு செயலாளர் நியமனம்!

1606902712 Jayantha De Silva 2
1606902712 Jayantha De Silva 2

ஐ.சி.டி.ஏ நிறுவனத்தின் தலைவர் ஜயந்த டி சில்வா தொழிநுட்ப அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அமைச்சு அண்மைய நாட்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் உருவாக்கப்பட்டு, வர்த்தமானியும் வெளியாகியிருந்தது.

இருப்பினும் இதற்கான அமைச்சுப் பதவி இன்னமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.