இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

Indian Cricketers M 63
Indian Cricketers M 63

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மத்தேயு வேட் 58 ஓட்டங்களையும் ,ஸ்டீவன் ஸ்மித் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

195 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 தசம் 4 ஓவர்களில் வெற்றியிலக்கைக் கடந்தது.

இந்திய அணி சார்பில் ஷிகர் தவான் 52 ஓட்டங்களையும் விராட் கோலி 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இந்த நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஹார்டிக் பாண்ட்யா தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன், 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி 2 க்கு 0 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.