கொழும்பு கிங்ஸ் அணியை இலகுவாக வீழ்த்தியது காலி அணி!

940256 img20201127084042
940256 img20201127084042

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 14 ஆவது போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ்அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு கிங்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

கொழும்பு கிங்ஸ் அணி சார்பில்,டி பெல்-டிரம்மண்ட்44 ஓட்டங்களையும்,தினேஷ் சண்டிமல் 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இந்த நிலையில், 172 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணி, 17 தசம் 3 ஓவர்களில் இலக்கைக் கடந்தது.

காலி கிளாடியேட்டர்ஸ்அணி சார்பில்அஹ்சன் அலி56 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அத்துடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராக முகமது அமீர்தெரிவு செய்யப்பட்டார்.