வீரர்களுக்கு கொரோனா தொற்று? – இலங்கை வருமா தென்னாப்பிரிக்க அணி..!

image 2
image 2

இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் விளையாடும் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளமை தென்னாப்பிரிக்க அணியில் குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்க உள்ளுர் போட்டிகளில் விளையாடிய 5 வீரர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிய 10 வீரர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வீரர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில், தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்து தற்போது குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதுவரையில் தென்னாப்பிரிக்க அணியில் குயின்டன் டி கொக் பொப் டு பிளெசிஸ் ( டெம்பா பவுமா , அன்ரிச் நார்ட்ஜே கைல் வெர்ரெய்ன் , க்ளெண்டன் ஸ்டூர்மன் ஆகிய வீரர்கள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது