அவுஸ்திரேலியா வலுவான நிலையில்

aus vs pak
aus vs pak

அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்ரேலிய அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 312 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 240 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

அதிகபட்சமாக ஆசாத் ‌ஷபிக் 76 ஓட்டங்களையும் அணித்தலைவர் அசார் அலி 39 ஓட்டங்களையும், முகமது ரிஸ்வான் 37 ஓட்டங்களையும், ஷான் மசூத் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மிட்சல் ஸ்டார்க் 4 விக்கட்டுக்களையும், பட் கம்மின்ஸ் 3 விக்கட்டுக்களையும், ஹசில்வூட் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

இன்று 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்ரேலிய அணி 312 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. டேவிட் வோர்னர் 151 ஓட்டங்களையும், ஜோ பேர்ன்ஸ் 97 ஓட்டங்களையும், பெற்றுக்கொடுத்தனர்.

நாளைய தினம் மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.