லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி!

202006260350133979 La Liga Vinicius Ramos see off Mallorca as Real Madrid win SECVPF
202006260350133979 La Liga Vinicius Ramos see off Mallorca as Real Madrid win SECVPF

லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் மாட்ரிட்டில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்-அத்லெட்டிக் கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிக் கிளப்பை தோற்கடித்தது. ரியல் மாட்ரிட் அணியில் டோனி குரூஸ் 45-வது நிமிடத்திலும், கரிம் பென்ஜிமா 74-வது மற்றும் 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

அத்லெட்டிக் அணி தரப்பில் ஆன்டெர் கேபா 52-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். அத்லெட்டிக் வீரர் ரால் கார்சியா 13-வது நிமிடத்தில் 2-வது மஞ்சள் அட்டை பெற்றதால் (சிவப்பு அட்டை) நடுவரால் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடியதால் தடுமாற்றத்தை சந்தித்தது. 13-வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி மொத்தம் 26 புள்ளிகள் பெற்று கோல் வித்தியாசத்தில் முறையே முதல் 2 இடங்களில் இருக்கும் ரியல் சோசிடாட் (26 புள்ளிகள்), அட்லெடிகோ மாட்ரிட் (26 புள்ளிகள்) அணிகளுடன் சமன் செய்துள்ளது.