இடமாற்றப்படும் இந்திய டெஸ்ட் போட்டி?

86316.2
86316.2

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான மாற்றீட்டு இடமாக மெல்பர்ன் கிரிக்கெட் மைதானம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த போட்டியானதுநியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள சிட்னியில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும்,நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது.

இதன் காரணமாக, புதிய மாற்றீட்டு இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன்,குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானமும் மற்றுமொரு தெரிவாக முன்வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.