ஐ.எஸ்.எல். கால்பந்து சென்னை அணி ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி 3வது வெற்றியை பெறுமா?

202012261332301093 Tamil News tamil news isl chennai fc vs east bengal match on today SECVPF
202012261332301093 Tamil News tamil news isl chennai fc vs east bengal match on today SECVPF

11 அணிகள் பங்கேற்கும் 7வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.

2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

3வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது. 5வது போட்டியில் கவுகாத்தி அணியுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 6வது ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது.

சென்னையின் எப்.சி. 6 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் உள்ளது.

சென்னையின் எப்.சி. 6ஆவது ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை இன்று இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.

சென்னை அணி ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி 3ஆவது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.