விக்ரம் வேதா பட ரீமேக்கில் இணைந்த முன்னணி நடிகர்!

Hrithik Web Series d
Hrithik Web Series d

மற்ற மொழி ரசிகர்களை கவரும் வகையில் தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் ஒரு சில படங்கள் உருவாகும். அந்த வகையில் அனைத்து மொழி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா.

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது இந்தியில் விக்ரம் வேதா படத்தின் ரீமேக் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்த படத்தில் அமீர்கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக சமீபத்தில் விலகிக் கொண்டார்.

இதனையடுத்து அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் மற்றொரு முன்னணி நடிகர் ரித்திக் ரோஷன் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அதேபோல் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான் என்பவர் நடிக்க உள்ளார்.

அமீர் கான் படத்தை விட ரித்திக் ரோஷன் விக்ரம் வேதா பட ரீமேக்கில் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. விரைவில் விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தை இந்தி ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களும் விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.