இரண்டாவது டெஸ்ட் : 157 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி!

SAvSL1 720x450 1
SAvSL1 720x450 1

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 157 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.

ஜொகன்னஸ்பேர்க் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

இருப்பினும் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்களையும் இழந்து இலங்கை அணி 157 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக குசல் பெரேரா 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்து வீச்சில் அன்ரிச் நார்ட்ஜே 6 விக்கெட்களை கைப்பற்றினார்.

SAvSL2