தோனியின் கிரிக்கட் எதிர்காலம்??

msd1
msd1

இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி ஜனவரி மாதம் வரை எனது கிரிக்கட் எதிர்காலம் குறித்து கேட்க வேண்டாம், அதுவரை பொறுத்திருங்கள் என தெரிவித்துள்ளார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது செய்தியாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

எம்.எஸ்.தோனி, உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகக்கிண்ணத்தின் பின்னர் நடைபெற்ற தொடர்களிலிருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில், தோனி மீண்டும் அணியில் இடம்பெறுவாரா? T20 உலக கோப்பையில் ஆடுவாரா? எனும் கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தோனி இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து அண்மையில் கருத்து தெரிவிக்கையில்;

T20 உலக கிண்ணத்திற்கு முந்தைய கடைசி பெரிய தொடர் ஐ.பி.எல் தான். எனவே ஐ.பி.எல் இல் தோனி எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்தும், ஐ.பி.எல் இல் மற்ற விக்கெட் காப்பாளர், துடுப்பெடுத்தாட்ட வீரர்கள் எப்படி செயற்படுகிறார்கள் என்பதை பொறுத்தும் தான் தோனி அணியில் எடுக்கப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் அடுத்த விக்கெட் காப்பாளராக ரிஷப் பண்ட்டை உருவாக்கும் பணியை இந்திய அணி ஏற்கனவே தொடங்கிவிட்டதால், தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. அதை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தே வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

அதனால் தோனிக்கு பிரியாவிடை போட்டி மட்டும் ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.