இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலுக்கு கொரோனா!

201810201916489426 Denmark Open Badminton Saina Nehwal enters final SECVPF
201810201916489426 Denmark Open Badminton Saina Nehwal enters final SECVPF

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால்.

30 வயதான இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.

சாய்னா நேவால் இன்று முதல் வருகிற 17ஆம் திகதி வரை நடைபெற இருக்கும். தாய்லாந்து ஒபன் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்பதற்காக பாங்காக் சென்றார்.

இந்த நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட 3-வது பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சாய்னா ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருந்தார். தற்போது 2-வது முறையாக அவரை கொரோனா தாக்கி உள்ளது.

இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அங்குள்ள மருத்துவமனையில் சாய்னா குறைந்தபட்சம் 10 நாட்கள் தனிமையில் இருப்பார்.

இதேபோல் முன்னணி வீரர்களில் ஒருவரான பிரனாய்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரும் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.