முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 173/3

tom latham
tom latham

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் போது மழை குறுக்கிட்டதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி நியூசிலாந்தை துடுப்பெடுத்தாடுவதற்கு பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்சின் முதல் நாளில் 3 விக்கட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பெடுத்தாட்டத்தில் டொம் லதம் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் கிரிஸ் வோக்ஸ் 2 விக்கட்டுக்களையும், கிரிஸ் புரோட் 1 விக்கட்டினையும் வீழ்த்தினர்.

1வது போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 1-0 ன தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.