வோர்னர் முச்சதம், பாகிஸ்தான் இக்கட்டான நிலையில்

warner
warner

அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் வோர்னரின் முச்சதத்துடன் 500 ஓட்டங்களை கடந்தது.

நாணய சுழற்சியிலர் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 3 விக்கட் இழப்பிற்கு 589 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பெடுத்தாட்டத்தில் வோர்னர் 335 ஓட்டங்களையும், மார்னஸ் லபுசன்னே 162 ஓட்டங்களையும், மத்யூ வேட் 38 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 36ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஷஹீம் அப்ரிடி மாத்திரம் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் தனது 2வது இன்னிங்சில் 4 விக்கட்டுக்களை இழப்பிற்கு 84 ஓட்டங்களை பெற்று இக்கட்டான நிலையில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.