பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் போட்டி விளையாடுவேன் என நினைக்கவில்லை – டு பிளிசிஸ்!

201807021209295620 South Africa bank on pace for triumph in spin friendly Sri SECVPF
201807021209295620 South Africa bank on pace for triumph in spin friendly Sri SECVPF

தென்ஆப்பிரிக்கா அணி 13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி கராச்சியில் வருகிற 26ஆம் திகதி தொடங்குகிறது. பாகிஸ்தான் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தென்ஆப்பிரிக்கா அணியும் பயிற்சிக்கு தயாராகி வருகின்றனர். அந்த அணியில் ஏறக்குறைய அனைத்து வீரர்களுக்கும் இதுதான் முதல் பாகிஸ்தான் தொடராக இருக்கும்.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனான டு பிளிஸ்சிஸ், இவ்வளவு சீக்கிரம் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டி நடைபெறும் என நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தொடர் குறித்து டு பிளிஸ்சிஸ் கூறுகையில் ‘‘என்னுடைய கிரிக்கெட் காலத்தில் டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் மண்ணில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. ஒயிட்-பால் கிரிக்கெட் நடைபெறும் என்பது எனக்குத் தெரியும், ஆனால், டெஸ்ட் போட்டி இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எனக்குத் தெரியாது.

நான் டெஸ்ட் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 13 வருடத்திற்கு முன்பு இருந்தது போன்று ஆடுகளம் பிளாட்-ஆக இருக்கும். எங்களால் ரன்கள் குவிக்க இயலும் என நம்புகிறேன்’’ என்றார்.