இந்திய கிரிக்கட் வாரியத்தின் விதிகளில் மாற்றம்!!

bcci
bcci

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் கங்குலியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடக்கிறது. கூட்டத்தில் பல்வேறு வி‌‌ஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது.

இந்திய கிரிக்கட்டின் விதிமுறைகளின்படி ஒருவர் மாநில கிரிக்கெட் சங்கத்திலோ அல்லது இந்திய கிரிக்கட் வாரியத்திலோ தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால் 3 ஆண்டு இடைவெளி விட வேண்டும். இந்த விதியில் மாற்றங்களை கொண்டுவர விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இந்த பதவி காலத்தை இரண்டையும் சேர்த்து கணக்கிடக்கூடாது. மாநில சங்கத்தில் பதவியில் இருந்தாலும் கிரிக்கெட் வாரியத்திலேயே தொடர்ந்து 6 ஆண்டுகள் பொறுப்பில் இருக்கும் வகையில் விதிமுறையை திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு 3/4 பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலும் அவசியமாகும். குறித்த விதியில் மாற்றம் ஏற்படுத்தாத பட்சத்தில் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் 5 ஆண்டுக்கு மேல் பதவி வகித்து விட்ட சௌரவ் கங்குலி ஜூலை மாதத்திற்கு பிறகு பி.சி.சி.ஐ தலைவர் பதவியை துறக்க வேண்டிய நியேற்படும்.

மேலும் இக்கூட்டத்தில் கிரிக்கெட் வாரிய செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, போட்டித் தொடருக்கான கமிட்டி, பெண்கள் அணியின் தேர்வு கமிட்டி, கிரிக்கெட் திறமை கமிட்டி, மண்டல கமிட்டி, நடுவர்கள் கமிட்டி ஆகியவற்றுக்கு நிருவாகிகளை நியமிப்பது குறித்தும் முடிவு செய்யப்படுகிறது.