லாராவின் சாதனை, அவுஸ்ரேலிய தலைவரால் தப்பியது!!

tim paine
tim paine

அவுஸ்ரேலிய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்ரேலிய அணியின் வோர்னர் 300 ஓட்டங்களை தாண்டியதும் லாராவின் 400 ஓட்டங்கள் எனும் சாதனையை தகர்ப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவுஸ்ரேலிய அணியின் ஆட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அணித்தலைவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.

‘இன்னும் ஒரு மணி நேரம் விளையாட அனுமதி அளித்திருந்தால் வோர்னர் 400 ஓட்டங்களை கடந்திருப்பார். டிம் பெய்ன் தவறான முடிவை எடுத்து விட்டார், அதனால் லாராவின் சாதனை தப்பி விட்டது’ என்று விமர்சித்துள்ளனர்.

அதே நேரத்தில் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது டுவிட்டர் பக்கத்தில்,

‘அவுஸ்திரேலிய அணி ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது
எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் அவுஸ்திரேலியர்கள் எப்போதும் தனிநபர் சாதனையை விட அணியின் நலனுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவுஸ்ரேலிய அணி சார்பில் பிராட்மேனின் வசமிருந்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையை வோர்னர் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.