பெடரேசன் கோப்பை தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணிக்கு 12 பதக்கம்!

201904210139337322 Asian Athletics Tournament is starting today SECVPF
201904210139337322 Asian Athletics Tournament is starting today SECVPF

18-வது பெடரேசன் கோப்பை தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது.

இந்தப் போட்டியில் 15 சிறுவர்கள், 10 சிறுமிகள் ஆகியோர் அடங்கிய 25 பேர் கொண்ட தமிழக அணி பங்கேற்றது. தமிழக வீரர், வீராங்கனைகளின் செயல்பாடு இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக இருந்தது.

தமிழக அணிக்கு 5 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 12 பதக்கம் கிடைத்தது.

பதக்கம் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்று தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.