ஜோ ரூட் இரட்டைச்சதம்- போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் நிலை

root
root

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட்டின் இரட்டை சதத்துடன் முன்னிலை பெற்றுள்ளது.

நியூசிலாந்து தனது முதலாவது இன்னிங்ஸில் 375 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. நியூசிலாந்து சார்பாக டொம் லதம் 105 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இங்கிலாந்து தனது முதலாவது இன்னிங்சில் 476 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இங்கிலாந்து சார்பில் அணித்தலைவர் ஜோ ரூட் 226 ஓட்டங்களையும், ரொனி பேர்ன்ஸ் 101 ஓட்டங்களையும், ஒலி பொப் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் நீல் வோக்னர் 5 விக்கட்டுக்களையும், ரிம் சௌதி 2 விக்கட்டுக்களையும், மட் ஹென்ரி, மிட்சல் சான்ட்னர் தலா ஒரு விக்கட்டினை வீழ்த்தினர்.

நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டினை இழந்துள்ளது.

போட்டியின் இறுதிநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ள நியூசிலாந்து அணி போட்டியை வெற்றி தோல்வியின்றி கொண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றது.