பகல் இரவு டெஸ்ட் – அவுஸ்ரேலிய அணி வெற்றி

aus vs pak
aus vs pak

அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ஓட்டங்கத்தில் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 3 விக்கட் இழப்பிற்கு 589 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

துடுப்பெடுத்தாட்டத்தில் வோர்னர் 335 ஓட்டங்களையும், மார்னஸ் லபுசன்னே 162 ஓட்டங்களையும், மத்யூ வேட் 38 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 36ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஷஹீம் அப்ரிடி 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் யாசிர் ஷா 113 ஓட்டங்களையும், பாபர் அசாம் 97 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மிட்சல் ஸ்டார் 6 விக்கட்டுக்களையும், பட் கம்மின்ஸ் 3 விக்கட்டுக்களையும், ஹசில் வூட் 1 விக்கட்டினையும் வீழ்த்தினர்.

287 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த பாகிஸ்தான் அணியை மீண்டும் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டிருந்தது. அதன்படி பாகிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

துடுப்பெடுத்தாட்டத்தில் ஷாக் மசூத் 68 ஓட்டங்களையும், ஆசாத் சாபிக் 57 ஓட்டங்களையும், மொஹமட் ரிஸ்வான் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் நதன் லயன் 5 விக்கட்டுக்களையும், ஹசில்வூட் 3 விக்கட்டுக்களையும், மிட்சல் ஸ்டார்க் 1 விக்கட்டினையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன், தொடராட்ட நாயகனாக டேவிட் வோர்னர் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியுடன் அவுஸ்ரேலிய அணி 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தான் அணி கடந்த 1999ம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை அவுஸ்திரேலியா மண்ணில் ஒரு வெற்றி அல்லது டிரா கூட பெற முடியாத நிலையை அடைந்துள்ளது. இதுவரை 14 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.

வெளிநாட்டு மண்ணில் ஒரு அணி தொடர்ந்து 14 போட்டிகளில் தோல்வியடைந்த ஒரே அணி என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. அத்துடன் தொடர்ந்து ஐந்து தொடர்களிலும் வெள்ளயடிப்பு செய்யப்பட்டுள்ளது.