கோப் குழுவில் முன்னிலையாகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு

download 11
download 11

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற குழுவான கோப் குழுவில், இன்றைய தினம் முன்னிலையாகுமாறு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின், 2017 மற்றும் 2018ஆம் நிதியாண்டுகளுக்கு அமைவான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் செயல்திறன் என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சட்டத்திற்கு அமைய மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் விற்பனை உள்ளிட்ட செயல்பாடுகளுடன் தொடர்புடைய கட்டணங்களுக்கான வர்த்தமானிக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது