பதவியை இராஜினாமா செய்த இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர்!

152056591 256421059256322 8405288332467143803 n
152056591 256421059256322 8405288332467143803 n

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் டேவிட் சேகர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

டேவிட் சேகர் தனது பதவியில் இருந்து உடனடியாக விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்றையதினம் கையளித்துள்ளார்.

தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே டேவிட் சேகர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

டேவிட் சேகர் இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.