9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் வென்ற நோவக் ஜோகோவிச்!

c867bbccf95922f2e31df42aa48e9fd390cb0fa8411a2f800428934f6b56e2d5 1
c867bbccf95922f2e31df42aa48e9fd390cb0fa8411a2f800428934f6b56e2d5 1

நோவக் ஜோகோவிச் 3 செட்களில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி 9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் உட்பட ஒட்டுமொத்தமாக சர்வதேச டென்னிஸ் அரங்கில் 18 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

பெப்ரவரி 21 (நேற்று) மெல்போர்னின் ரோட் லாவர் அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரான டேனியல் மெட்வெடேவ் உலக நம்பவர் வன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.

சுமார் 1:53 மணிநேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் டேனியல் மெட்வெடேவை தோற்கடித்தார் நோவக் ஜோகோவிச்.

இதனால் 25 வயதான ரஷ்யாவின் மெட்வெடேவ் தனது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் இரண்டையும் இழந்துள்ளார்.

2019 அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் நடாலிடம் தோல்வியடைந்த மெட்வெடேவ், ஜோகோவிச்சிடம் இந்த தோல்வியை தற்சமயம் தழுவினார்.