தெற்காசிய விளையாட்டு விழாவின் T20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியுற்று தங்க பதக்கத்தினை தவற விட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 2 ஓவர் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 91 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிரணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் தோல்வியினை தழுவியது.