பாகிஸ்தானுக்கெதிரான 1வது டெஸ்ட்- இலங்கைக்கு சுமாரான தொடக்கம்

karunaretna
karunaretna

சுற்றுலா இலங்கை அணிக்கும் – பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பெடுத்தாட்டத்தில் அணித்தலைவர் கருணாரத்ன 59 ஓட்டங்களையும், ஓசத பெர்னான்டோ 40 ஓட்டங்களையும், மத்தியூஸ் 31 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களையும், நிரோசன் டிக்வெல்ல ஆட்டமிழக்காது 11 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் நசீம் ஷா 2 விக்கட்டுக்களையும், மொஹம்மட், ஷஹீம் அப்ரிடி, உஸ்மான் ஷின்வாரி தலா ஒரு விக்கட்டினையும் வீழ்த்தினர்

நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.