அஸ்கர் அப்கான் மீண்டும் அணித்தலைவராக நியமனம்

asgar afghan
asgar afghan

ஆப்கானிஸ்தான் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக அஸ்கர் அப்கான் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண தொடரில் எதிர்பாராத வகையில் அஸ்கர் அப்கான் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு குல்பதின் நைப் அணித்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அவரின் தலைமையின் கீழ் 9 ஆட்டங்களிலும் தோல்வியடைந்திருந்தது.

அவரைத்தொடர்ந்து ரஷீத் கான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை பறிகொடுத்திருந்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக அஸ்கர் அப்கான் மீண்டும் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.