ஒலிம்பிக் தீப ஓட்டத்தை இரத்து செய்ய திட்டம்

download 4
download 4

கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை அதிகளவாக உயர்வடைந்துள்ளமையினால் ஒசாகா நகரில் ஒலிம்பிக் தீப ஓட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்று ஒசாகா மாகாண ஆளுநர் ஹிரோபூமி யோஷிமுரா வியாழக்கிழமை தெரிவித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தீப ஓட்டம் ஏப்ரல் 13-14 முதல் ஒசாகா மாகாணம் வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு கொவிட் -19 அவசரகால நிலையிலிருந்து வெளிவந்த இந்த ஒசாகா மாகாணத்தில் புதன்கிழமை 599 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே யோஷிமுரா மேற்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தீப ஓட்டம் கடந்த வாரம் புகுஷிமாவில் தொடங்கியது. இதன்போது சுமார் 10,000 ஓட்டப்பந்தய வீரர்கள் 121 நாட்களில் நாட்டின் 47 மாகாணங்கள் வழியாக தீபத்தினை எடுத்துச் செல்வார்கள்.

டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் வீதியோர பார்வையாளர்களை இந்த ஓட்டத்தை பார்வையிடும் போது முகக் கவசம் அணிய வேண்டும், சமூக தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.