ஆறுதல் வெற்றியைப் பெறுமா இலங்கை அணி?

malinga
malinga

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி -20 தொடரின் மூன்றாவது போட்டி கண்டி – பல்லேகலை மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

சொந்த மண்ணில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும், களத்தடுப்பில் செய்த தவறுகள் காரணமாக இலங்கை அணிக்கு தோல்வியை தழுவ நேரிட்டது. குறிப்பாக பிடியெடுப்புகள் மற்றும் ரன்-அவுட் வாய்ப்புகளை தவறவிட்டிருந்தமை, அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இலங்கை அணி இந்த வருடத்தில் விளையாடிய 6 T-20 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், லசித் மாலிங்கவின் தலைமை பொறுப்பும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

அணியின் தொடர் தோல்விகள் காரணமாக அடுத்த வருடம் நடைபெறவுள்ள ரி-20 உலகக் கிண்ணத்தில் மாலிங்க தலைவராக செயற்படுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மலிங்காவின் கீழ் அணி தொடர்ந்து மோசமாக செயல்படுவதால் SLC T-20 அணியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கும், மேலும் அவருக்கு பதிலாக ஒரு கேப்டனை நியமிக்க வாரியம் பரிசீலித்து வருகிறது.

தொடர் ஏற்கனவே இழக்கப்பட்டுள்ள நிலையில், அழுத்தமின்றி விளையாடுவதற்கும், புதிய வீரர்களுக்கான வாய்ப்பை கொடுக்கவும் இலங்கை அணி எதிர்பார்த்து காத்திருக்கிறது. எவ்வாறாயினும், இரண்டு அணிகளிலும் ஏற்பட்டிருக்கும் உபாதைகள் அணிகளுக்குள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்கனவே ஏற்படுத்தியிருக்கிறது.

மைதானத்தில் மோதுண்டு உபாதைக்குள்ளாகிய குசல் மெண்டிஸ் மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.