அவுஸ்ரேலிய-நியூசிலாந்து பகல்-இரவு டெஸ்ட்

aus vs anz
aus vs anz

அவுஸ்ரேலிய-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி பகல்-இரவு போட்டியாக நடைபெறுகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்ற அவுஸ்ரேலிய அணி 5 விக்கட் இழப்பிற்கு 315 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

அவுஸ்ரேலிய அணியின் துடுப்பெடுத்தாட்டத்தில் மார்னஸ் லபுசன்னே 143 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 43 ஓட்டங்களையும், ஸ்மித் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

டிராவஸ் ஹெட், அணித்தலைவர் ரிம் பெய்ன் இருவரும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

நியூசிலாந்து பந்துவீச்சில் நீல் வோக்னர் 3 விக்கட்டுக்களையும், ரிம் சௌதி, கிரான்ட்கோம் தலா ஒரு விக்கட்டினை வீழ்த்தினர்.