பிரதேச செயலகங்களை மையப்படுத்தி 1000 தேசிய பாடசாலைகள்!!

dalas
dalas

நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களையும் மையப்படுத்தி 1000தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும் தெரிவித்தார்.

அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் மொத்தமாக 10,175பாடசாலைகள் காணப்படுகின்றன. அவற்றில் 374 தேசிய பாடசாலைகள் உள்ளன. சில மாவட்டங்களில் ஒரு தேசிய பாடசாலை கூட இல்லை.

நாட்டிலுள்ள 330 பிரதேச செயலகப் பிரவுகளில் 124 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒரு தேசியப் பாடசாலைகூட இல்லை.

வட மாகாணத்தில் 38 பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ள போதிலும் அங்கு 26 தேசியப் பாடசாலைகள்தான் உள்ளன. ஆகவே, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் குறைந்தபட்சம் ஒரு தேசியப் பாடசாலையாவது அமைக்கப்படும். என்றாலும் ஒரு பிரதேச செயலகப் பிரிவில் மூன்று தேசியப் பாடசாலைகளை அமைக்கும் வகையில் 1000 தேசியப் பாடசாலைகள் திட்டம் முன்னெடுக்கப்படும்.

இரண்டு வருட காலப்பகுதிக்குள் மும்மொழியும் கற்பிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் 25 மாவட்டங்களிலும் 25 தேசிய பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கும் கல்வி அமைச்சு திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவித்தார்.