முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக்குக்கு 8 வருட தடை!

thumb Heath Streak Zimbabwe
thumb Heath Streak Zimbabwe

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹீத் ஸ்ட்ரீக்குக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) 8 ஆண்டு கால தடை விதித்துள்ளது.

ஐ.சி.சி. ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய 5 குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹீத் ஸ்ட்ரிக் மீது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்க முடியாதவாறு ஐ.சி.சி. 8 ஆண்டு கால தடை விதித்துள்ளது.

ஹீத் ஸ்ட்ரீக் 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு காலம் வரை ஸிம்பாப்வே கிரிக்கெட் அணி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் அணிகளின் பயிற்றுநராக செயற்பட்டிருந்த காலத்தில் கிரிக்கெட் மோசடியில் ஈடுபட்டமை விசாரணையில் தெரிய வந்ததால் அவருக்கு 8 ஆண்டு கால தடை விதிக்கபட்டடுள்ளது.

தகவல்களை வெளியிடுவது, அத்தகைய தகவல்கள் பந்தய நோக்கத்துக்காக பயன்படுத்தலாம் என தெரிந்திருந்தும் அவற்றை வெளியிடுதல், ஆவணங்களை அழித்தல் அல்லது சமர்ப்பிக்கப்படாமை, பரிசு மற்றும் விருந்தோம்பல் குறித்தவற்றுக்கான பற்றுச்சீட்டு சமர்ப்பிக்காமை உள்ளிட்ட குற்றங்களுக்காக ஹீத் ஸ்ட்ரீக்குக்கு 8 ஆண்டு கால தடையை ஐ.சி.சி. விதித்துள்ளது.