‘நீலங்களின் சமர்’ கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு

unnamed 7
unnamed 7

கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமஸ் கல்லூரிகளுக்கிடையில் இடம்பெறும்  ‘நீலங்களின் சமர்’ என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியின் இணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

142 ஆவது ‘நீலங்களின் சமர்’ எதிர்வரும் மே 6 முதல் 8 ஆம் திகதி வரை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.