ஒலிம்பிக்கை ரத்து செய்ய மக்கள் விருப்பம்!

21 60969d59092eb
21 60969d59092eb

ஜப்பானில் சுமார் 60 சதவீத மக்கள் டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளமை திங்களன்று வெளியான கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

2020 டோக்கியோ ஒலிம்பிக் ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு குறைவான காலப் பகுதி உள்ள நிலையில் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மே மாத இறுதி வரை டோக்கியோ உள்ளிட்ட மேலும் சில பகுதிகளுக்கு ஜப்பான் அவசரகால நிலையை நீட்டித்துள்ளது. அதிகரித்து வரும் கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக் விளையாட்டுக்களை தொடர வேண்டுமா என்பது குறித்து கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந் நிலையில் மே 7-9 முதல் யோமியூரி ஷிம்பன் என்ற ஜப்பானின் தினசரி பத்திரிகை நடத்திய ஆய்வில், 59 சதவீதமானோர் விளையாட்டுக்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் 39 சதவீதமானோர் விளையாட்டுக்களை நடத்த விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்த வேண்டும் என்று கூறியவர்களில், 23 சதவீதமானோர் பார்வையாளர்கள் இல்லாமல் நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தொற்றுநோய் காரணமாக ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

போட்டிகளில் பங்கெடுக்க வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் உள்நாட்டு பார்வையாளர்களுக்கான அனுமதி குறித்த இறுதி முடிவு ஜூன் மாதத்தில் எடுக்கப்படும் என்று அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

கியோடோ செய்தி நிறுவனம் நடத்திய இதேபோன்ற கருத்துக் கணிப்பில் 70% பேர் ஒலிம்பிக்கை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ விருப்பம் வெளியிட்டனர்.

இதேவேளை டி.பி.எஸ். செய்திச் சேவை வார இறுதியில் நடத்திய மற்றொரு கருத்துக் கணிப்பில் விளையாட்டுக்கள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது மீண்டும் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று 65% பேர் விரும்பினர்.

கியோடோ செய்தி நிறுவனம் நடத்திய இதேபோன்ற கருத்துக் கணிப்பில் 70% பேர் ஒலிம்பிக்கை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ விருப்பம் தெரிவித்தனர்.