மேற்படிப்புக்காக கராத்தேயில் புதிய காட்ட வடிவத்தை உருவாக்கிய மாணவி

karate
karate

மாணவர்கள் விளையாட்டுத்துறையில், கலைத்துறையில் சாதனைகளை படைக்கும்போது அதற்கு ஏதுவாக கல்வித்துறையிலும் வளரவேண்டிய தேவை இன்றியமையாதது.

சுவிட்சர்லாந்து இத்தோசுக்காய் கராத்தே கழக மாணவி செல்வி. மகாராஜா‌ மெளதிசா, தனது உயர் நிலை கல்லூரி இறுதியாண்டுத் தேர்வில் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக்காக கராத்தேக் கலையினைத் தெரிவுசெய்து அதில் விசேடமாக காட்டா என்ற‌ விடயத்தை முக்கியப்படுத்தி ஒரு புதிய வடிவத்தை உருவாக்கி அதன் விளக்கங்களையும் எடுத்துரைத்து, ஆய்வுக்கட்டுரை, செயல்முறை விளக்கம் மற்றும் பாடவிதானத்தை முன்னிலைபடுத்தல் ஆகியவற்றை திறமையாக மேற்கொண்டு சிறப்பாக தேர்ச்சியடைந்துள்ளார்.

செல்வி.ம.மெளதிசா சிறு வயது முதல் சென்செய்.கெளரிதாசன் இடம் கராத்தே கலையை கற்றுவருகின்றார். இவரின் இந்த தேர்ச்சிக்கு ஆசான் கௌரிதாசனின் சிறப்பான வழிநடத்தலும் முக்கிய காரணமாகும்.