நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

download 60
download 60

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளார்.

ஜோப்ரா ஆர்ச்சரின் வலது முழங்கையில் அண்மையில் ஏற்பட்டிருந்த காயத்திலிருந்து அவர் இன்னும் குணமடையவில்லை என்பதால் குறித்த தொடரில் இணைத்துக்கொள்ளப்படவில்லையென இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த கிரிக்கட் சபை குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட கிரிக்கட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.