இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாக்கிஸ்தான் இலங்கை அணிகள் பலப்பரீட்சை

images 3 3
images 3 3

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி தற்பொழுது கராச்சியில் நடைபெற்று வருகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி வரும்நிலையில் இலங்கை அணியின் அபாரமான பந்துவீச்சினை எதிர்கொள்ளமுடியாமல் தடுமாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

இதேவேளை இந்த போட்டியில் இலங்கை அணியில் இருந்து கசுன் ராஜித வௌியேற்றப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக லசித் எம்புல்தெனிய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அதேபோல், பாகிஸ்தான் அணியில் இருந்து உஸ்மான் சின்வாரி வௌியேற்றப்பட்டு,அவருக்குப்பதிலாக யாஷிர் சாஹ் அணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது போட்டி மழை காரணமாக சமநிலையில்நிறைவடைந்தமைக்குறிப்பிடத்தக்கது .