மோர்கனை வாங்கியிருந்தாலும் தினேஷ் கார்த்திக்தான் அணித்தலைவர்

mcculum
mcculum

மோர்கனை வாங்கியிருந்தாலும் தினேஷ் கார்த்திக்தான் அணித்தலைவர் என கொல்கத்தா நைட் ரைடர் அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்கல்லம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளமையின் காரணமாக அவரை அணித்தலைவராக நியமிக்கப்படலாம் என்று கருதப்பட்டது.

இதனை மறுத்துள்ள மெக்கலம் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;

நிச்சயம் தினேஷ் கார்த்திக்தான் எங்கள் அணித்தலைவர். அதில் மாற்றம் இல்லை. தற்போது சிறந்த தலைவர்களில் ஒருவராக மோர்கன் விளங்குகிறார். தினேஷ் கார்த்திக்கின் தலைமைக்கு உதவுவதில் மிக பொருத்தமானவராக மோர்கன் இருப்பார். அத்துடன் துடுப்பாட்டத்தில் 4-வது வரிசையையும் நிரப்புவார்’’என தெரிவித்தார்.