முன்னாள் அணித் தலைவரை பயிற்சியாளராக நியமித்தது ஆர்சனல்

arteda
arteda

ஆர்சனல் தனது முன்னாள் அணித் தலைவர் மைக்கல் ஆர்டேடாவை தலைமை பயிற்சியாளராக மூன்றரை ஆண்டு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்பெயினின் உனை எமரிக்குக்கு பதிலாகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து ஆண்டு காலம் ஆர்சனல் அணிக்காக விளையாடி இருக்கும் 37 வயதுடைய ஆர்டேடா FA கிண்ணத்தை இரு முறை வென்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஒரு வீரராக ஓய்வுபெற்ற பின் மன்செஸ்டர் அணியுடன் இணைந்த ஆர்டேடா, பெப் குவார்டியோலாவின் கீழ் ஒரு பயிற்சியாளராக பணியாற்றினார்.

இதன்படி ஆர்சனல் அணியின் இடைக்கால முகாமையாளர் பிரட்டி ஜங்பேர்க்கிடம் இருந்து நாளை (22) அந்தப் பொறுப்பை ஆர்டேடா ஏற்கவுள்ளார்.