ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட மக்கள் மீண்டும் வெள்ள அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளமையின் காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேப்பவெட்டுவான் வீதியில் அமைந்துள்ள மாவடி ஓடை, புலுட்டுமான்ஓடை, பெரியவட்டவான், ஈரலக்குளம், இழுக்குப்பொத்தானை, பெருமாவெளி போன்ற கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கயுளுக்கான பாதுகாப்பு பணிகளை மாவட்ட செயலகத்தின் அனர்த்த பிரிவு உட்பட பிரதேச சபை ஈடுபட்டு வருகின்றனர்.